தமிழக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணி பேசியதாவது:-
* மதுவிலக்கு, நீர் மேலாண்மை, பெண் பாதுகாப்பு, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உறுதி செய்யவேண்டும்.
* கனிமவளம் கொள்கையை தடுக்க வேண்டும்.
* மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* அனைவருக்கும் தரமான இலவச மருத்தும், சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும்.
* போதையில்லா தமிழ்நாடு என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடு. முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
* மதுவை ஒழிக்க 40 ஆண்டுகளாக பா.ம.க. போராடி வருகிறது.
* தருமபுரி மாவட்டத்தில் மதுப்பழக்கமும், விற்பனையும் அதிகம்.
* ஒரு மதுக்கைடயை மூடினால் அருகில் 4 சந்துக்கடைகளை திறந்துவிடுகிறார்கள், முதலமைச்சர் விழிப்புடன் இருக்க வேண்டும்.
* மதுவை ஒழிக்க தொடர் கண்காணிப்பு தேவை, தொடர் முயற்சி தேவைப்படுகிறது.
* முதலமைச்சர் தலைமையிலான ஆளுங்கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை பா.ம.க. கொள்கைகளுக்கு ஒதுத்துப்போகும் வகையில் உள்ளது.
* எனது பேரக்குழந்தைகள் வளர்ந்து வரும்போது போதை இல்லாத தமிழகமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
* எனது ஆசை தான் தமிழ்நாட்டு பெண்களின் ஆசை, அதனால் போதை, மதுவை ஒழிக்க சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
* சந்துக்கடைகளை திறக்க விடக்கூடாது. மது இல்லா தமிழகம் தான் மகளிரின் எதிர்பார்ப்பு.
* நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் இருந்து பா.ம.க. விலகி இருக்க விரும்புகிறது என்றார்.