நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றியது. ஆட்சியமைக்க தேவையான 118 தொகுதிகளைப் பெற மற்றக் கட்சிகளிடம் ஆதரவுக் கோரிவந்தது. இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்று 5 இடங்கள் வென்ற காங்கிரஸ் நேற்று முன்தினம் ஆதரவு தெரிவித்தது.
இந்நிலையில், சிபிஐ, சிபிஎம், உள்ளிட்ட இடதுசாரிகளிடமும் இன்று ஆதரவு தெரிவித்தன. 2 இடங்களை வைத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
விஜய் ஆளுநரை சந்திக்க சென்றுள்ளார். இந்த சூழலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு 2 இடங்களை வென்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உடன் ஏற்கனவே தவெக எம்எல்ஏ அருண்ராஜ் சந்தித்தபோது ஆதரவு தர ஐயுஎம்எல் மறுத்தது. நேரடியாக ஸ்டாலின் இடமே கேட்கலாமே என காதர் மொய்தீன் அருண்ராஜிடம் தெரிவித்தார். அதற்கு அவர், நீங்களே கேளுங்கள் என கூறியதாக காதர் மொய்தீன் பேட்டியில் தெரிவித்தார்.
மேலும் ஐயுஎம்எல் நேற்றும் இன்றும் நாளையும் திமுகவுடன் தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் தவெக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. இந்த சூழலில் ஐயுஎம்எல், தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் ஐயுஎம்எல் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஐயுஎம்எல் கட்சி அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், " தமிழகத்தில் நடந்து முடிந்த ஈட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்று பாபநாசம், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளில் முறையே ஏ.எம். ஷாஜஹான், ஆகியோர் எஸ்.எஸ்.பி.சையத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஜனநாயக முறையிலான ஆட்சி நிறுவப்படுவதற்கு திமுக தலைவர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் மேதகு தமிழக ஆளுநர் அவர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழு மனதோடு வரவேற்கிறது.
சட்டமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினுடைய இரண்டு உறுப்பினர்களும் மேதகு ஆளுநர் மேற்கொள்ளக்கூடிய அரசு அமைப்புக்கான அனைத்து செயல்பாடுகளுக்கும் துணை நிற்பர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.