தமிழக செய்திகள்

பேசாதவர்களை தூக்கி வைக்கிறார்கள், பேசுபவர்களை தூக்கி எறிகிறார்கள் - சீமான் ஆதங்கம்

எளிதில் கிடைக்கும் பொருள் எதற்கும் எப்போதுமே மதிப்பில்லை.

தமிழக தேர்தல் பரபரப்பு முடிந்து தவெக ஆட்சி அமைத்துள்ளது. விஜய் முதல்வர் ஆகியுள்ளார். இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் ஒட்டுமொத்தமாக சுமார் 4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சென்னை, மறைமலைநகரில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது, உண்மைகளை பேசாதவர்களை மக்கள் கொண்டாடுகின்றனர். மக்களுக்காக உண்மைகளைப் பேசுபவர்களைத் தூக்கி எறிகின்றனர்.

எளிதில் கிடைக்கும் பொருள் எதற்கும் எப்போதுமே மதிப்பில்லை. அதிகாரம் என்பது மிகவும் வலிமையானது என்றாலும் அது யாருக்கும் நிலையானது அல்ல.

7 அடி நீளம் தாண்ட 70 அடி பின்னே போக வேண்டும். வாழ்க்கையில் பெரிய வெற்றிகளைப் பெற சில நேரங்களில் நாம் பின்வாங்கிப் பொறுமையாக இருக்க வேண்டும்.

நம் கட்சியின் கொள்கைகளை புரிந்து கொண்டு எதிர்காலத்தில் மக்கள் நம்மை தேடி தேடி வருவர்.

தோல்வி என்பது நமக்கு இல்லை. வெற்றி ஒன்றே நமக்கு எல்லை. நல்ல வேலை என்னை தோற்கடித்து சட்டமன்றம் செல்லவிடாமல் தடுத்தீர்கள்.

நான் மட்டும் உள்ளே சென்றிருத்தினால் எல்லோரும் வெளியே இருப்பார்கள். முதல் அமைச்சர் ஆன பிறகுதான் அவருக்கு கடன் இருப்பதே தெரிகிறது." என்று விமர்சித்தார்.