செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி (நெல்லை) மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியப் பொது இடங்களில் சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், நெல்லை மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 22, 2026) போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் மூலம் 5 வயதுக்குட்பட்ட 9.16 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி (நெல்லை) மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியப் பொது இடங்களில் சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பகுதிகளிலும் உள்ள குழந்தைகள் எளிதில் அணுகும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவதை உறுதி செய்ய சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே முந்தைய முகாம்களில் சொட்டு மருந்து பெற்ற குழந்தைகளுக்கும் இன்றைய சிறப்பு முகாமில் மீண்டும் சொட்டு மருந்து வழங்குவது அவசியமாகும்.
இளம்பிள்ளை வாத நோய் தடுப்பில் போலியோ சொட்டு மருந்து மிக முக்கியப் பங்கு வகிப்பதால், தகுதியுள்ள அனைத்துக் குழந்தைகளையும் பெற்றோர் அருகிலுள்ள சிறப்பு முகாம்களுக்கு அழைத்துச் சென்று சொட்டு மருந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட போக்குவரத்து மையங்களிலும் நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.