காவல்துறை மீதான மானிய கோரிக்கையை முதலமைச்சர் வஜய் தாக்கல் செய்தார். அப்போது, புதிய அறிவுப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.
இதைதொடர்ந்து, காவல்துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்கள் மீதே பழி போடாமல் முதலமைச்சர் பதில் கூற வேண்டும்.
திமுக ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருப்பதாக கொள்கை விளக்கக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் சாதிய கொலைகள் குறைந்துள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் கூறி உள்ளீர்கள்.
பெயர் மாற்ற அறிவிப்பு அல்ல திட்டம் ரத்து என்ற அறிவிப்பு தான் வருகிறது.
முந்தைய ஆண்டுகளை விட திமுக ஆட்சியில் சாதிய பாகுபாடு, பாலியல் வன்கொடுமைகள் குறைந்ததாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி.
தவெகவின் 100 நாள் ஆட்சியில் ஒன்று பழைய திட்டத்தை ரத்து செய்கிறீர்கள், இல்லை பழைய திட்டத்தை தொடர்கிறீர்கள்.
திமுக ஆட்சியில் தமிழ்நாடு டாப் கியரில் சென்று கொண்டிருந்த தவெக ஆட்சியில் ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது.
தாய்மாமன் காது குத்து திட்டம் என பெயர் மாற்றம் செய்யலாம். கொடுத்த வாக்குறுதிகளை பாதி பாதியாக நிறைவேற்றுவது ஏன்?
வருடத்திற்கு 6 இலவச சிலிண்டர் என வாக்குறுதி அளித்துவிட்டு இப்போது 3 சிலிண்டர் மட்டும் தான் என்கிறீர்கள்.
இதுவரை இல்லாத அளவில் திமுக ஆட்சியில் போதை பொருட்கள் பறிமுதல். நீண்ட நாட்களாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளுக்கு நீண்ட கால விடுப்பு வழங்க வேண்டும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து தீர்ப்பு வாங்கி கொடுத்தோம்.
தமிழ்நாட்டில் கொலை நடக்காத நாளே இல்லை.
தவெக ஆட்சியில் 10 ஆணவ கொலைகள் நடந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.