தமிழக செய்திகள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைவராக அமைச்சர் வெங்கட ரமணன் நியமனம்!

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சராக வெங்கட ரமணன் உள்ளார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் புதிய தலைவராக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி.வெங்கட ரமணன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கான சிறப்பு அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இந்த நியமனத்தின் மூலம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஒட்டுமொத்த நிர்வாகம், செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் (ரேஷன் கடைகள்) ஆகிய பணிகளை அமைச்சர் நேரடியாக மேற்பார்வையிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.