தமிழக செய்திகள்

நேரு மைதானத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, நேரு மைதானத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் நடைபெற்று சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், இடது சாரிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகள் ஆதரவுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.

ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட 9 பேர் அவருடன் பதவி ஏற்றுக் கொண்டனர். நேற்று முன்தினம் அவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. ஆதவ் அர்ஜூனாவுக்கு விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை அவர் நேரு ஸ்டேடியத்திற்கு வருகை தந்து, அங்குள்ள சூழ்நிலைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும், பயிற்சி மேற்கொண்டிருந்தவர்களிடம் உரையாடினார்.