ஈரோடு, கோவை மாவட்டங்களை குறிவைத்து போலி நிதி நிறுவனங்களின் மோசடி மீண்டும் தலைதூக்கியுள்ளது. சைபர் குற்றங்கள் மூலம் ஒரே ஆண்டில் தமிழ்நாட்டில் ரூ.1,800 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் மோசடி முதல் போதைப்பொருள் வரை சமூகத்தில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொய்யான நிதி நிறுவனங்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டி .ஜி. பி.ஆக இருக்கும் பொழுது 5 நிதி நிறுவனங்களை மூடினோம்.
ஆனால் தமிழகத்தில் துரதிஷ்டவசமாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நிறுவனங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இதில் ஈரோடு, கோவை, சேலம் மக்கள்தான் அதிகம் ஏமாற்றப்படுகின்றார்கள்.
ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் ரூ.3 லட்சம், ரூ 4 லட்சம் கிடைக்கும் என்றெல்லாம் கூறி ரூ.10 லட்சம், ஒரு கோடி, இரண்டு கோடி என முதலீடு பெற்று ஏமாற்றுகின்றனர்.
கணவனுக்கு தெரியாமல் மனைவியும் மனைவிக்கு தெரியாமல் கணவனும் முதலீடு செய்வார்கள். ஆரம்பத்தில் பணத்தை கொடுக்கும் நிதி நிறுவனம் அதிக பணம் கிடைத்ததும் ஏமாற்றி விடுவார்கள்.
இத்தகைய பெரும் மோசடியில் மக்கள் ஏமாற கூடாது மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.
சைபர் மோசடியில் ஓராண்டில் தமிழ்நாட்டில் 1800 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது மற்ற திருட்டு வழக்குகளில் மொத்தமாக கூட்டினால் 100 கோடி கூட தாண்டாது.
ஆனால் மொபைல் போன் மூலமாக மட்டும் ஆண்டிற்கு 1800 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதற்காகத்தான் சைபர் செக்யூரிட்டி ஹெட் குவாட்டர்ஸ் துவங்கப்பட்டது.
லட்சக்கணக்கான மக்கள் ஏமாற்ற தயாராக இருக்கிறார்கள் வட இந்தியாவில் இதற்காக ஐ.டி கம்பெனி போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. எளிதில் ஏமாறக்கூடாது.
காவல் மரணம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே இருக்கிறது. இதில் பெரும்பளவு கட்டுப்படுத்தப்ப ட்டது ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நிகழ்வுகள் நடந்து வருகிறது.
இந்த நிகழ்வுகள் காவலர்கள் தாக்கி தான் இறந்தார்களா இயற்கையில் இறந்தார்களா என்பதெல்லா ம் தெரியாது. திருட்டு போன்ற குற்றங்களில் காவல்துறையினருக்கு பாதிக்கப்பட்டவர்கள் அழுத்தம் தருவார்கள் அதை தாங்காமல் காவலர்கள் பலம் பிரயோகிக்கலாம்
ஆனால் அது பெரும்பாலும் குறைவு காவல் நிலையத்தில் இறந்தால் அவர்கள் குடும்பமும் கஷ்டப்படுகிறது. அதில் காவலர்களும் பாதிக்கப்படுகிறார்கள் அவர்களும் கைது செய்யப்படுகிறார்கள் அவர்கள் குடும்பமும் பாதிக்கப்படுகிறது.
அனைத்து காவல் நிலையங்களிலும் கேமரா இருக்கிறது 1680 காவல் நிலையங்களிலும் கேமரா இருக்கிறது துன்புறுத்தல் குறைந்து விட்டது .
இது இல்லாமல் ஆக வேண்டும் நாகரீகமான சமூகமாக இருக்க வேண்டும். காவலர்கள் மீது பொது மக்களுக்கும் நம்பிக்கை வருவதில்லை பாதிக்கப்பட்டார்கள் கொடுக்கும் அழுத்தம் தான் இதற்கு காரணம்.
போதை பொருள் புழக்கம் தொடர் நிகழ்வாக உள்ளது 45 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற போதை பொருட்கள் இருந்தன.
பெரும் அளவில் காவல்துறை கட்டுப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது நான் டிஜிபி ஆக இருக்கும் போது சொத்துக்களை பறிமுதல் செய்தோம் நல்ல அதிகாரிகள் வந்துள்ளார்கள் சில மாற்றங்கள் இருக்கின்றன.
ஆனால் நூறு சதவீதம் ஒழிக்க வேண்டும். சட்டம் கடுமையாகத் தான் இருக்கிறது இதற்கு பலமுனை தாக்குதல் நடத்த வேண்டும் பள்ளிகள் கல்லூரிகள் சாலைகள் உள்ளிட்ட இடங்களில் இது போன்ற நபர்களை கண்டறிந்து தடுக்க வேண்டும் மனநல நிபுணர்களை நியமிக்க வேண்டும்.
தொடர்ச்சியாக போதை பொருள் பயன்படுத்துவார்கள் மனநல பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் டி அடிக்சன் மையங்களை பெருமளவில் கொண்டு வர வேண்டும் இதற்கு அதிக அளவு நிதி ஒதுக்க வேண்டும்.
இது மிகப்பெரிய போர் சமுதாயத்தில் டிமாண்ட் இருக்கும்போது சப்ளை எப்படியும் வந்து விடும் இதற்கு பலமுனை தாக்குதல் நடத்த வேண்டும் அப்பொழுதுதான் போதை பொருளை கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார்.