சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கான தொடக்க விழா நடைபெற்றது.
இதில், விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
துணை முதலமைச்சரான பின், நான் இட்ட முதல் கையெழுத்து முதலமைச்சர் கோப்பைக்கானது.
முதலமைச்சர் கோப்பைக்கான நிதியை ரூ.82 கோடியாக உயர்த்துவதற்கான கோப்பில்தான் முதலில் கையெழுத்திட்டேன்.
இந்தியாவிலேயே தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் சென்ற 6 வீரர்களில், 4 பேர் பதக்கங்கள் பெற்றனர்.
இந்தியா விளையாட்டுத்துறையின் தலைநகரமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விளையாட்டினை மாபெரும் மக்கள் இயக்கமாக்கிடும் வகையில், கழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும், 'முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024'-ன் மாநில அளவிலானப் போட்டிகளை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கி வைத்தோம்.இந்த ஆண்டிற்கான #CMTrophy-ஐ அறிமுகப்படுத்தி,… pic.twitter.com/GP8YD0l4FI