தமிழக செய்திகள்

தவெக ஆட்சியில் தமிழ்நாடே அச்சத்தில் உறைந்து போயிருக்கிறது - கனிமொழி

தமிழ்நாட்டில் யாருக்குமே பாதுகாப்பில்லை; தவெக ஆட்சியில் தமிழ்நாடே அச்சத்தில் உறைந்து போயிருக்கிறது.

மதுரை, மேலூர் அருகே நேற்றைய தினம் காணாமல் போன 7 வயது சிறுவன் இன்று சடலமாக மீட்கப்பட்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டில் யாருக்குமே பாதுகாப்பில்ல. தவெக ஆட்சியில் தமிழ்நாடே அச்சத்தில் உறைந்து போயிருப்பதாக கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியமங்கலத்தில் நேற்று காணாமல் போன 7 வயது சிறுவன் முத்துச்செல்வன், இன்று வீட்டின் அருகே உள்ள பாழடைந்த ஓட்டு வீடு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தனியமங்கலத்தைச் சேர்ந்த பெரியகருப்பன் - சத்தியா தம்பதியின் 7 வயது மகன் முத்துச்செல்வம், நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். தேடுதல் வேட்டைக்குப் பிறகு, இன்று வீட்டின் அருகாமையில் உள்ள ஒரு பாழடைந்த ஓட்டு வீட்டில் சிறுவன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

தமிழ்நாட்டில் யாருக்குமே பாதுகாப்பில்லை; தவெக ஆட்சியில் தமிழ்நாடே அச்சத்தில் உறைந்து போயிருக்கிறது. என்று திமுக எம்பி கனிமொழி கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து கனிமொழி எம்பி தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

தமிழ்நாடே அச்சத்தில் உள்ளது

மதுரை, மேலூர் அருகே நேற்றைய தினம் காணாமல் போன 7 வயது சிறுவன் இன்று சடலமாக மீட்கப்பட்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டில் யாருக்குமே பாதுகாப்பில்லை; தவெக ஆட்சியில் தமிழ்நாடே அச்சத்தில் உறைந்து போயிருக்கிறது.

"விஜய் மாமா" என்று அழைத்து உங்களுக்கு ஓட்டுக் கேட்ட குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்றால், முதலமைச்சர் காவல்துறையைக் கையில் வைத்திருந்து என்ன பயன்? உங்களால் கவனிக்க முடியவில்லை என்றால் அந்தத் துறையை வேறு யாரிடமாவது கொடுத்துவிடுங்கள்; மழலைகளின் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம்.

மதுரை, மேலூர் அருகே நேற்றைய தினம் காணாமல் போன 7 வயது சிறுவன் இன்று சடலமாக மீட்கப்பட்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டில் யாருக்குமே பாதுகாப்பில்லை; தவெக ஆட்சியில் தமிழ்நாடே அச்சத்தில் உறைந்து போயிருக்கிறது

விஜய் மாமா என்று அழைத்து உங்களுக்கு ஓட்டுக் கேட்ட குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்றால், முதலமைச்சர் காவல்துறையைக் கையில் வைத்திருந்து என்ன பயன்? உங்களால் கவனிக்க முடியவில்லை என்றால் அந்தத் துறையை வேறு யாரிடமாவது கொடுத்துவிடுங்கள்; மழலைகளின் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம்.

என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT