தமிழக செய்திகள்

சென்னை உள்பட 5 மாவட்டங்களின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் த.வெ.க அரசு புதிதாக பதவி ஏற்றதை தொடர்ந்து, நேற்று 14 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து இன்று 5 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள்,

சென்னை - மாலதி ஹெலன்,

ராமநாதபுரம் - சிவகுரு பிரபாகரன்,

திருவள்ளூர் - கவிதா,

பெரம்பலூர் - சரண்யா அரி,

அரியலூர் - மிருணாளினி,

உள்ளிட்ட ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளை குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு தமிழக அரசு பணிநியமனம் செய்துள்ளது.