தமிழக செய்திகள்

‘இந்தியாவிலேயே மோசமான ஆட்சி நடைபெறுவது தமிழ்நாட்டில்தான்’ - இபிஎஸ் சாடல்!

திட்டங்களின் பெயரை மட்டுமே விஜய்யால் மாற்ற முடியுமே தவிர, தமிழ்நாட்டுக்கு வேறு எதையும் கொடுக்க முடியாது.

சென்னை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,

“அதிமுகவின் நிலவரம் நன்றாகத் தான் இருக்கிறது, மிகச் சிறப்பாக இருக்கிறது. அதிமுக எப்போது தேர்தல் வந்தாலும் சரி, இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார். அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

தனி கட்சி ஆரம்பித்தவர்கள் எவ்வாறு மீண்டும் அதிமுகவிற்கு வருவார்கள்? இந்த ஆட்சி மிக மிக மோசமான ஆட்சி. இந்தியாவிலேயே மோசமான ஆட்சி நடைபெறும் மாநிலம், தமிழ்நாடு தான்.

கொலைகள் நடக்காத நாள் இல்லை. எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை.

போதைப் பொருள் நடைபெறுகின்ற காரணத்தால் தான் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து கட்சித் தலைவர்களும் கண்டித்தும், அறிக்கையும் விடுகிறார்கள்.

ஆனால் இந்த அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கையை எடுப்பதில்லை. ஏனென்றால் திறமையில்லாத அரசாங்கமாக இந்த அரசாங்கம் நடக்கிறது.

திட்டங்களின் பெயரை மட்டுமே விஜய்யால் மாற்ற முடியுமே தவிர, தமிழ்நாட்டுக்கு வேறு எதையும் கொடுக்க முடியாது. இந்த 6 மாத ஆட்சியில் மக்கள் பட்ட துன்பம் தான் ஏராளம். விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்குலைவு, இதையெல்லாம் சந்திக்கக்கூடிய ஆட்சி தான் இந்த 6 மாத கால ஆட்சி.

இந்த ஆட்சி பொறுப்பேற்றப் பிறகு எந்த பெரிய திட்டமும் இதுவரை செயல்படுத்தவில்லை. ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதம் ஆகிறது. என்ன திட்டம் இதுவரை கொண்டு வரப்பட்டுள்ளது? தவெக ஆட்சிக்கு வந்த பிறகுதான் குற்றங்கள் அதிகரித்துள்ளன.” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT