தமிழக செய்திகள்

காவிரியில் தமிழ்நாட்டுக்கு தான் அதிக உரிமை இருக்கிறது- சவுமியா அன்புமணி

தமிழ்நாட்டில் ஐந்தரை கோடி மக்கள் காவிரி நீரை நம்பியே உள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-வது நாள் அமர்வு தொடங்கியது.

மேகதாது அணை தொடர்பான அரசினர் தனித்தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.

மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் தங்களது வாதங்களை முன்வைத்துள்ளனர்.

அந்த வகையில் முதலமைச்சரின் தனித்தீர்மானத்துக்கு பாமக ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி கூறியதாவது:-

மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு பா.ம.க. ஆதரவு தெரிவித்து கொள்கிறது.

கர்நாடகாவில் 320 கி.மீ மட்டுமே காவிரி நீர் பாய்கிறது, தமிழகத்தில் 420 கி.மீ ஓடுகிறது காவிரி நீர்.

காவிரியில் தமிழ்நாட்டுக்கு தான் அதிக உரிமை இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஐந்தரை கோடி மக்கள் காவிரி நீரை நம்பியே உள்ளனர்.

4 அணைகளில் 115 டிஎம்சி நீர் சேமிக்க முடியும், மேகதாதுவில் 70 டிஎம்சி நீர் சேமிக்க கர்நாடக முயற்சி.

இவ்வாறு குறிப்பிட்டார்.