தமிழக செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் 31 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.சிறப்பு திட்ட அமலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமது மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 31 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி ஆட்சியராக சதீஷ், கிருஷ்ணகிரி ஆட்சியராக தினேஷ்குமார், விழுப்புரம் ஆட்சியராக ஷேக் அப்துல் ரகுமான், திண்டுக்கல் ஆட்சியராக சரவணன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பிரதாப், திருவண்ணாமலை ஆட்சியராக தர்பகராஜ், திருப்பத்தூர் ஆட்சியராக மோகனசந்திரன், திருவாரூர் ஆட்சியராக சிவசவுந்தரவல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த சரயு பொதுத்துறை இணைச்செயலாளர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். திருவள்ளூர் ஆட்சியரான பிரபு சங்கரை சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பழனி, இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையராக இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் துணை முதலமைச்சரின் செயலாளர், துணை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் இயக்குநர்கள், செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு திட்ட அமலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமது மாற்றப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT