தமிழ்நாடு கவர்னர் அர்லேகர் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டி வருகிறார்.
இதற்காக அவர் இன்று காலை சென்னை மக்கள் மாளிகையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலமாக கோவைக்கு வருகிறார்.
பின்னர் கவர்னர் அர்லேகர், சாலை மார்க்கமாக காரில் ஊட்டிக்கு செல்கிறார். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள மக்கள் மாளிகைக்கு செல்லும் அவர் இன்றிரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.
நாளை காலை ஊட்டி மக்கள் மாளிகையில் இருந்து கார் மூலமாக புறப்பட்டு கோவைக்கு வருகிறார். கோவை வரும் வழியில் மேட்டுப்பாளையம் வனக் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதன்பின்னர் கவர்னர் அர்லேகர் கார் மூலமாக கோவை வேளாண் பல்கலைக்கழகத்துக்கு வருகிறார். நாளை இரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார். அதனை தொடர்ந்து நாளை மறுநாள் கோவை வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் உலக யோகா தின நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கவர்னர் அர்லேகர் பங்கேற்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு கவர்னர் அர்லேகர் கார் மூலமாக கோவை விமான நிலையம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை புறப்பட்டு செல்கிறார்.
கவர்னரின் வருகையையொட்டி கோவை, நீலகிரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டங்களில் உள்ள முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.