கவின் ஆணவக் கொலை வழக்கில், சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் செல்வ கணேஷ் (27), கடந்த ஆண்டு ஜூலை 27 அன்று நெல்லை பாளையங்கோட்டையில் படுகொலை செய்யப்பட்டார்.
சுர்ஜித்தின் சகோதரியும், கவினும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தனர். கவின் பட்டியலினத்தைச் சார்ந்தவர் என்பதால் பென்ணின் குடும்பத்தார் கண்டித்ததாக கூறப்படுகிறது.பெண்ணின் குடும்பத்தார் திட்டமிட்டே இந்த கொலையை செய்த்தாக கவின் குடும்பத்தார் குற்றம்சாட்டியிருந்தனர்,இந்த நிலையில் இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளியான சுர்ஜித்தின் பெற்றோரும் காவல்துறை சார்பு ஆய்வாளர்களுமான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகிய இருவர் மீதான குற்றப்பத்திரிகையைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முன்னதாக ரத்து செய்தது. அவர்களுக்கு எதிராகப் போதிய நேரடி ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
பெண்ணின் பெற்றோருக்கும் சுா்ஜித்துக்கும் இடையே நடந்ததாக கூறப்படும் சந்திப்பையோ உரைடாயலையோ நிரூபிக்க நேரடி சாட்சிகளோ தடயங்கலோ இல்லை என்று தெரிய வருவதால், இந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்வதாக உயா்நீதிமன்றம் அறிவித்தது.
கவின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றப்பத்திரிக்கை ரத்தை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் கூறி கவின் பெற்றோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் , இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கவின் பெற்றோரை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு நேரில் சந்தித்து உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையிடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று உத்தரவு அளித்ததன் பேரில் போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
கவின் கொலை வழக்கில் உயர் நீதிமன்றத்தின் குற்றப்பத்திரிக்கை ரத்தை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, "ஒரு கிரிமினல் வழக்கு எப்படி கையாளப்படக்கூடாது, அவ்வாறு கையாளப்பட்டு இருக்கிறது" என்று கடுமையான அதிருப்தியைத் தெரிவித்து அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.