தமிழக செய்திகள்

15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

பயிற்சி மற்றும் ஆரம்பக்கட்ட பணிகளை முடித்த இந்த இளம் அதிகாரிகளுக்கு, முக்கிய சப்-டிவிஷன்களில் பணிகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

  • அதன்படி, தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக ஏ.நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • பட்டுக்கோட்டை உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பி.அங்கிதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக எஸ்.அஸ்வினி நியமிக்கப்பட்டுள்ளார்.

  • திருநெல்வேலி ஊரக உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பிஸ்வாஜித் பண்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • கடலூர் மாவட்டம், சிதம்பரம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக டிஜே. சத்ரிய கவின் நியமிக்கப்பட்டுள்ளார்.