தமிழக செய்திகள்

மத்திய மாநில உறவுகள் மீதான உயர்நிலைக் குழுவை கலைத்தது தமிழக அரசு

அதிகார வரம்பு மாநில சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

2026 நவம்பர் 6 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின் படி தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட மத்திய-மாநில உறவுகள் மீதான உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டு, அதன் அதிகார வரம்பு மாநில சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது..

2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய-மாநில உறவுகள் தொடர்பான அரசியலமைப்பு விதிகள், சட்டங்கள் மற்றும் கொள்கைகளை மறுஆய்வு செய்வதற்கும், கூட்டாட்சி மற்றும் மாநில சுயாட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்கும் மூன்று பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் நடைபெற்ற இக்குழுவில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே. அசோக் வர்தன் ஷெட்டி மற்றும் முன்னாள் மாநில திட்டக் கமிஷன் துணைத் தலைவர் எம். நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாகப் பணியாற்றினர். இக்குழு, பெரிதும் பாராட்டப்பட்ட தனது அறிக்கையின் முதல் பகுதியை, அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பிப்ரவரி 16 அன்று சமர்ப்பித்தது.

தமிழ்நாடு மாநில சட்ட ஆணையம் இன்று மறுசீரமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் மத்திய-மாநில உறவுகள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் பிற விஷயங்கள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குதல், தற்போதுள்ள சட்டங்களை மறுஆய்வு செய்தல் மற்றும் மாநிலத்தின் சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட விரிவான அதிகாரங்கள் இந்த ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன, என்று அந்த அரசாணை சுட்டிக்காட்டியது.

இந்த அரசாணை மத்திய் மாநில உறவுகள தொடர்பானபல்வேறு பிரச்சினைகளை ஆராயும் 'மத்திய-மாநில உறவுகள் மீதான உயர்நிலைக் குழு' என்பது ஒரு சட்டப்பூர்வமற்ற அமைப்பு ஆகும்.

கவனமாகப் பரிசீலித்த பின்னரே உயர்நிலைக் குழுவின் சேவைகளை உடனடியாக நிறுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அரசாணையில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தகக்து.

SCROLL FOR NEXT