தமிழக செய்திகள்

தமிழ்நாட்டிற்கு உரிய நீரை ஒவ்வொரு ஆண்டும் போராடியே தமிழ்நாடு பெறுகிறது- இபிஎஸ்

மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தீர்மானம்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-வது நாள் அமர்வு தொடங்கியது.

மேகதாது அணை தொடர்பான அரசினர் தனித்தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.

மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் தங்களது வாதங்களை முன்வைத்துள்ளனர்.

அந்த வகையில் முதலமைச்சரின் தனித்தீர்மானம் மீதான விவாதத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

மேகதாது அணைக்கு எதிராக அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது எனு பிரதமரை சந்தித்து வலியுறுத்தியவர் ஜெயலலிதா.

தமிழ்நாட்டிற்கு உரிய நீரை ஒவ்வொரு ஆண்டும் போராடியே தமிழ்நாடு பெறுகிறது.

கர்நாடகா ஒருபோதும் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தந்ததே இல்லை.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.