தமிழ்நாடு மின்துறை நிலை குறித்து மின்சார துறை அமைச்சர் நிர்மல்குமார் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
25 ஆண்டுகள் மின்துறையின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை. 2001 முதல் 2006 வரை மின்துறையில் ரூ.8,355 கோடி நஷ்டம், 2006 முதல் 2011 வரை மின்துறையில் ரூ.35,463 கோடி நஷ்டம்.
மின்துறையில் 2011 முதல் 2016 வரை ரூ.56,361 கோடி நஷ்டம், 2016 முதல் 2021 வரை ரூ.58,534 கோடி நஷ்டம்.
மின்துறையில் 2021ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரை ரூ.34,447 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தற்போதைய கடன் ரூ.2,47,130 கோடியாக உள்ளது.
மின்சார வாரியத்தில் புதிதாக எதுவும் செய்யவில்லை, ஆனால் ரூ.51,000 கோடி செலவுகள் அதிகமாகியுள்ளது.
மின்சாரத்துறையில் புதிதாக டிரான்ஸ்பார்மர்கள் வாங்கவில்லை, முந்தைய ஆண்டுகளில் செய்ததை தான் செய்துள்ளனர்.
மின்சாரத்துறையில் புதிதாக எதுவும் செய்யாமல் செலவுகள் மட்டும் எப்படி அதிகமானது?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.