தமிழக செய்திகள்

தமிழ்நாடு மின்வாரியக் குழுமம் ரூ. 2.47 லட்சம் கோடி கடனில் உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

தமிழ்நாடு மின்வாரியக் குழுமத்தின் கடன் 2.47 கோடி ரூபாய் என நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ள நிதிநிலை வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

* மாநிலத்தின் பொதுத்துறைகளில் 3.18 லட்சம் கோடி ரூபாய் மறைமுக ஆஃப் பட்ஜெட் பொறுப்புகள் உள்ளன. இதனால் மாநிலத்தன் மொத்த கடன் 13.18 லட்சம் கோடி ரூபாய்.

* தமிழ்நாடு மின்வாரியக் குழுமத்தின் திரண்ட இழப்பு 1.82 லட்சம் கோடி ரூபாய்.

* தமிழ்நாடு மின்வாரியக் குழுமத்தின் கடன் 2.47 கோடி ரூபாய்.

* கடைசி 5 வருடங்கள் இயங்க 1.45 லட்சம் கோடி ரூபாய் பொது நிதியை அரசு வழங்கியுள்ளது.

போக்குவரத்து துறை

* போக்குவரத்து துறை 74.6 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. ஒரு கி.மீட்டருக்கு 78.81 ரூபாய் செலவு. வருவாயாக கிடைப்பது 25 ரூபாய் மட்டுமே.