தமிழக செய்திகள்

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவு

தி.மு.க.வைச் சேர்ந்த 34 அமைச்சர்களில் 31 அமைச்சர்கள் பின்னடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் வரும் நிலையில், தி.மு.க.வைச் சேர்ந்த 34 அமைச்சர்களில் 31 அமைச்சர்கள் பின்னடைந்துள்ளனர்.

கொளத்தூர் தொகுதியில் 4-ம் சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் மு.க.ஸ்டாலின் பின்னடைந்துள்ளார். தவெக முன்னிலையில் உள்ளது.