தமிழக செய்திகள்

பட்டாசு வெடித்தபோது விபத்து: தமிழகம் முழுவதும் 679 பேர் காயம்

தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்து மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக, தமிழ்நாட்டில் கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அதிகாலை முதலே மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தீபாவளிப் பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அரசு அனுமதி வழங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்து மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, சென்னையில் காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வந்ததால், பட்டாசு வெப்பத்தால் சற்று குறைந்திருந்தது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 679 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 569 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 110 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரவு 9 மணி நிலவரப்படி தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறைக்கு 91 அவசர அழைப்புகள் வந்துள்ளதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT