தமிழக செய்திகள்

தமிழகத்தில் கட்டுமான பொருட்கள் விலை அதிரடி உயர்வு

பி.சாண்ட் ரூ.500 உயர்ந்து ரூ.5,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ரூ.3,300-க்கு விற்கப்பட்ட யூனிட் ஜல்லி ரூ.500 உயர்ந்து ரூ.3,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.4,000-க்கு விற்கப்பட்ட ஒரு யூனிட் எம்.சாண்ட் ரூ.500 உயர்ந்து ரூ.4,500-க்கு விற்கப்படுகிறது.

ரூ.5,000க்கு விற்கப்பட்ட யூனிட் பி.சாண்ட் ரூ.500 உயர்ந்து ரூ.5,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஈரான் - அமெரிக்கா யுத்தத்தால் மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவி வரும் சூழலில் எண்ணெய் வரத்து குறைந்து பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் அதன் தாக்கம் கட்டுமான பொருட்கள் விலையிலும் ஏற்பட்டுள்ளது.

இதனால் வீடு மற்றும் வணிக ரீதியான கட்டுமானங்கள் ஆகியவற்றுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.