தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார் எம்.பி. மாணிக்கம் தாகூர்.
கடந்த சில நாட்களாகவே திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும், சில தொகுதிகளில் (உதாரணமாக மதுரை வடக்கு) திமுகவின் செயல்பாடுகள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இதனால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டு வந்தது.
இதனைத்தொடர்ந்து மாணிக்கம் தாகூர் நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் தலைமைக்கு செல்வப்பெருந்தகை கடிதம் எழுதியதாக கூறப்பட்டது. பின்னர் கூட்டணி உறுதியான நிலையில் மௌனமாக இருந்துவந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அதிருப்தி காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியும் தொகுதித் தேர்வு குறித்து அதிருப்தி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.