49 மீனவர்களை விடுவிக்க வெளியுறவுத்துறைக்கு முதல்வர் விஜய் கோரிக்கை 
தமிழக செய்திகள்

இலங்கையில் உள்ள 49 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் மீனவர்களின் மீன்பிடி படகை மீட்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் முதலமைச்சர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம்

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தில், “12.08.2026 அன்று இரவு IND-TN-10-MM-329 என்ற பதிவு எண்ணைக் கொண்ட மீன்பிடி இயந்திரப் படகில் மீன்பிடிக்க சென்ற தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இந்த சம்பவம் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் தனிப்பட்ட கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதேபோன்று இரண்டு சம்பவங்கள் ஏற்பட்டு மிருந்த கவலையையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நாள் வரையில் 49 இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தகுந்த தூதரக நடவடிக்கைகள் வாயிலாக இலங்கை அரசிடம் இந்த கோரிக்கையை முன்வைத்து சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் விரைாக விடுவித்து, அவர்கள் பாதுகாப்பாக தாய்நாடு திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விரைந்து நடவடிக்கை

மேலும், இதுபோன்ற சம்பங்கள் தொடர்ந்து நிகழ்வதால் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்வது, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கும், தமிழ்நாட்டு மீனவ சமூகத்தினருக்கும் இந்த விவகாரத்தில் பெரும் நம்பிக்கையையும் நிர்மதியையும் அளிக்கும்.

இந்த கடிதம் குறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரின், உடனடித் தலையீட்டைத் தான் எதிர்நோக்குகிறேன்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.