தமிழக செய்திகள்

அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் செல்வதை தடுத்த ஒரே முதல்வர்- அமைச்சர் பிரபு

மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்திருக்கிறவர் தான் எங்கள் முதல்வர்.

சட்டசபையில் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி பேசினார் அப்போது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இதற்கு அமைச்சர் என் ஆனந்த் அவ்வப்போது விளக்கம் அளித்தார்.

அப்போது நடந்த விவாதம்:-

அமைச்சர் என் ஆனந்த்:- அண்ணனின் மாவட்டம் கொடைக்கானலில் தாண்டிக்குடி பகுதிக்கு எங்கள் தலைவர் ஒரு முறை படப்பிடிப்புக்கு சென்றுவிட்டு கீழே இறங்கி வரும் போது ஒரு மணி நேரம் தனியாக நடந்து வந்தார். ஆனால் அங்கு ஒரு பகுதியில் சாலை வசதியில்லை. அங்கு நம்ம சொந்த செலவில் சாலை போட்டுவிடலாமா என கேட்டார்.

அப்போது நம்மை பேனர் வைக்கவே விடமாட்றாங்க. ரோடு எப்படி போடுறதுனு கேட்டேன். நான் பதவியேற்ற 5 வது நாள் அந்த தாண்டிக் குடி கிராமத்திற்கு சாலை போட வேண்டும் என முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்தது . இன்னிக்கு 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கு வேலை தொடங்கியுள்ளது.

நூறு நாட்கள் திட்டத்திற்கு ரூ.12,600 கோடி வேண்டும். ரூ 7,586 கோடியில் தமிழக அரசு முதல் அமைச்சர் 5057 கோடி ஒதுக்கி இருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கண்டிப்பாக 150 நாட்கள் வேலை கொடுக்கப்படும் என்பதை இந்த நேரத்துல நாங்கள் தெரிவித்துகொள்கிறேன். இது செய்ய முடியுமா அப்படி என்றெல்லாம், பணம் இருக்குதா என்றெல்லாம் பார்த்து தான், ஒவ்வொரு திட்டத்தையும் தினந்தோறும் செயல்படுத்தும் முதல்வர் தான் எங்களுடைய முதல்வர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களுக்கு தெரியும் எப்படி பேசணும் இப்ப எப்படி ஆட்சி இருக்கின்றது என்பது.எல்லாம் உங்களுக்கு தெரியும். அதனால அதெல்லாம் கருத்தில் கொண்டு சொல்லுங்கள்.

மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்திருக்கிறவர் தான் எங்கள் முதல்வர். அதனால தான் இந்த மாதிரி எல்லாம் தயவு செய்து சொல்லாதீங்க.

நாங்க எல்லாம் சொல்ல ஆரம்பித் தோம் அப்படின்னா நிறைய விஷயங்கள் நாங்கள் பேச வேண்டியதாக இருக்கும். ஆகவே நீங்கள் எந்த ஒரு ஆலோசனையாக இருந்தாலும் நீங்கள் அதை தாராளமா சொல்லுங்கள் எங்களுடைய முதல்வர் 234 சட்டமன்ற தொகுதிக்கும் முதல்வர்.

மக்களுக்கு என்ன பிரச்சனை மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதை மட்டும் செய்யக்கூடிய முதல்வராக இருப்பார்

நான் அடிக்கடி உங்களிடம் குறுக்கிட சங்கடமாக இருக்குது அதனால தயவு செய்து நீங்கள் எதுவாக இருந்தாலும் எந்த ஒரு விஷயம் ஆனாலும் உங்களுடைய தொகுதி விஷயம் உங்களுடைய மாவட்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும் நீங்கள் சொல்லுங்கள் நாங்கள் செய்து தர தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சர் பிரபு :

இதுவரைக்கும் தமிழக வரலாற்றிலேயே நம்ம மக்களுக்கான சேவையை பூர்த்தி செய்வதற்கு இங்கு உள்ள கனிம வளங்களை நம்ம மக்களுக்கு கொடுக்கணும் அப்படிங்கற ஒரு நோக்கத்தோடு அண்டை மாநிலத்திற்கு செல்லும் கனிம வள த்திற்கு தடை போட்ட ஒரே முதலமைச்சர் நமது தமிழக முதலமைச்சர்.

இவ்வாறு விவாதம் நடந்தது.