தமிழக செய்திகள்

ஆழ்துளை மற்றும் குழாய் கிணறுகள் அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு

75% மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகளை தூர்வார ரூ.8.5 கோடி ஒதுக்கீடு.

தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார்.

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பை உருவாக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு மானியத்தில் ஆழ்துளை மற்றும் குழாய் கிணறு அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு.

பொதுப்பிரிவை சார்ந்த 500 விவசாயிகளுக்கு அதிகபட்ச மானியமாக 60% வரை வழங்குவதற்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு.

100% மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகள் உருவாக்குதல், 75% மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகளை தூர்வார ரூ.8.5 கோடி ஒதுக்கீடு.

நீர்ப்பாசன வசதியில்லாத 300 ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளின் புன்செய் நிலங்களில், நீர்ப்பாசன ஆதாரமாக ஆழ்துளை அல்லது குழாய்க்கிணறுகள் 100 சதவீத மானியத்தில் மின் மோட்டார் அல்லது சூரிய சக்தி பம்புசெட்டுகளுடன் அமைக்கப்படும். இத்திட்டத்திற்காக 56.72 லட்சம் கோடி ஒதுக்கீடு.

1000 விவசாயிகளுக்கு மானியத்தில் மின்கட்டமைப்புடன் சாராத சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட் அமைக்க ரூ.23 கோடி ஒதுக்கீடு.

பயிர் சாகுபடி, மதிப்பு கூட்டுதலுக்கான 50 ஒருங்கிணைந்த வேளாண் இயந்திர வாடகை வணிக மையங்கள் அமைக்க ரூ.8.13 கோடி ஒதுக்கீடு.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.