தமிழக செய்திகள்

AI தொழில்நுட்பத்தில் உழவர் செயலி- ரூ.2 கோடி ஒதுக்கீடு

பருத்தி உற்பத்தியை பெருக்கிட பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்திற்காக ரூ.27.21 கோடி ஒதுக்கீடு.

தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார்.

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

பயறு வகைகள், எண்ணெய் வித்துப்பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கத்திற்காக ரூ.203.64 கோடி ஒதுக்கீடு.

வானிலை, பாசனம், சந்தை விலை நிலவரம் உள்ளிட்டவற்றை விவசாயிகள் செல்போனில் அறிந்து கொள்ளும் வகையில் ஏஐ உழவர் செயலி.

ஒவ்வொரு உழவருக்கும் தனிப்பயன் சேவைகளை வழங்க ஏஐ அடிப்படையிலான செயலிக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு.

சிறுதானியங்களின் சாகுபடி பரப்பு, உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.63.81 கோடி.

அதிக ஊட்டச்சத்து நிறைந்த சீமைத்தினை, பாப்பரை, குலசாமை பயிர்களின் செயல்விளக்கத் திடல்களுக்காக ரூ.30 லட்சம் ஒதுக்கீடு.

சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு போன்ற பயிர்சாகுபடியை இருமடங்காக்க தமிழ்நாடு குறுதானிய இயக்கத்திற்கு ரூ.7.61 கோடி ஒதுக்கீடு.

பருத்தி உற்பத்தியை பெருக்கிட பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்திற்காக ரூ.27.21 கோடி ஒதுக்கீடு.

விவசாய நிலங்களில் நிரந்தரப் பசுமையை உறுதிப்படுத்த வேளாண் காடுகள் திட்டத்திற்காக ரூ.170.70 கோடி ஒதுக்கீடு.

மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.36 கோடி ஒதுக்கீடு.

காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளை தடுக்க காட்டுப்பன்றி சேதத் தடுப்பு திட்டத்திற்கு ரூ.7.35 கோடி ஒதுக்கீடு.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.