தமிழக செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,524 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் மரிய வில்சன்

மாடர்ன் பள்ளிகளை மேம்படுத்த ரூ.125 கோடி ஒதுக்கீடு.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து வருகிறார்.

பட்ஜெட்டில், பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,524 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,524 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், பள்ளி பாடத்திட்டம் மறுசீரமைப்பிற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3,734 அரசுப்பள்ளிகளில் ரூ.2132 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கல் திட்டம்- இந்த ஆண்டிற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.

அரசு பள்ளிகளில் தூய்மையை பாதுகாக்கும் விதமாக சூப்பர் கிளீன் கேம்பஸ் திட்டம் என்ற புதிய அறிமுகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்திற்கு ரூ.139 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மாடர்ன் பள்ளிகளை மேம்படுத்த ரூ.125 கோடி ஒதுக்கீடு.

பெருந்தலைவர் காமராசர் சிறப்பு பள்ளிகள் திட்டத்திற்காக ரூ.125 கோடி ஒதுக்கீடு. தரமான கல்வி வழங்க காமராஜர் சிறப்பு பள்ளிகள் திட்டம் செயல்படுத்தப்படும்.

போதையில்லா தமிழ்நாடு செயலி உருவாக்கப்பட்டு தன்னார்வ குழுக்கள் அமைக்க ரூ.7 கோடி ஒதுக்கீடு.

பள்ளி பாடத்திட்டம் மறு சீரமைப்பிற்காக கற்றலில் முதலிடம் தமிழ்நாடு திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு.

பொதுநூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மாற்ற ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.