தமிழக செய்திகள்

தமிழக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணிக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை- முதலமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை கஸ்தூரி ராஜாமணிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு.

ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான வலுதூக்குதல் போட்டியில், 67 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை கஸ்தூரி ராஜாமணிக்கு ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான வலுதூக்குதல் போட்டியில், 67 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி அவர்கள் தன்னம்பிக்கை, அயராத உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம் பெற்றுள்ள இம்மகத்தான வெற்றி, தமிழ்நாட்டின் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும்.

அவர் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT