ஒண்டிவீரன், விஜய்  
தமிழக செய்திகள்

இன்னுயிரை தியாகம் செய்த ஒண்டிவீரன்.. நினைவு தினத்தில் முதல்வர் விஜய் புகழஞ்சலி

தன் ஒரு கரத்தையே இழந்தபோதிலும் பல போர்களைப் புரிந்தார்

ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக போராடி வீரமரணமடைந்த ஒண்டிவீரன் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 20) அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி முதல்வர் விஜய் அவரது வீரத்தை மெச்சும் விதமாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியாகியுள்ள பதவில் விஜய் கூறியதாவது,

"ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு அஞ்சாமல், நம் மண்ணில் சுதந்திரக் கனலை ஏற்றிய விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவுநாளில் அவரது தியாகத்தைப் போற்றி வணங்குவோம்!

மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாக விளங்கி, நெற்கட்டான்செவல் போர்க்களத்தில் ஆங்கிலேயப் படைகளை ஒற்றை வீரராக எதிர்த்து நின்று, நிலைகுலையச் செய்ததோடு, தன் ஒரு கரத்தையே இழந்தபோதிலும் பல போர்களைப் புரிந்து தாய்நாட்டு விடுதலைக்காகத் தனது இன்னுயிரை தியாகம் செய்த ஒண்டிவீரன் அவர்களின் வீரத்தையும் தேசப்பற்றையும் நெஞ்சாரப் போற்றிடுவோம் !

வீரம் செறிந்த தமிழர் வரலாற்றில் ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!" எனத் தெரிவித்துள்ளார்.