தமிழக செய்திகள்

தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்!

2014 ஆம் ஆண்டு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்தார் முகுந்த் வரதராஜன்.

தேசத்திற்காக ராணுவத்தில் உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தை போற்றும் வகையில் தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட உள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ தீர்மானம் தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை செல்லும் இந்த முதன்மை நெடுஞ்சாலை சுமார் 16 கிலோமீட்டர் நீளமுடையதாகும்.

அவரது இல்லம் தாம்பரம் மாநகாரட்சி பகுதியில் அமைந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்தார் முகுந்த் வரதராஜன். அவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் சிவகார்த்திகேயனின் அமரன்.