கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி 50-வது வார்டு உறுப்பினரான மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த யாக்கூப் வெளிநடப்பு செய்தார்.
தாம்பரம் மாநகராட்சி கூட்டம் மேயர் வசந்த குமாரி தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் காமராஜ், ஆணையர் சரண்யா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் வே.கருணாநிதி, ஜோசப் அண்ணாதுரை, காமராஜ், இந்திரன், ஜெய்பிரதிப், மாமன்ற உறுப்பினர்கள் சேகர், பெருங்களத்தூர் புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி 50-வது வார்டு உறுப்பினரான மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த யாக்கூப் வெளிநடப்பு செய்தார். அவர் பேசும்போது, 50-வது வார்டு பகுதியில் உள்ள தாய் சேய் மருத்துவமணையில் போதிய ஊழியர்கள், மற்றம் கழிப்பிட வசதிகள் இல்லை. டயாலிசிஸ் மையம் தொடங்கப்பட்டும் போதிய பணியாளர்கள் இல்லை. இது குறித்து பலமுறை மாமன்றத்தில் கோரிக்கை வைத்தும் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கும் எடுக்கவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.