2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 108 தொகுதிகளை கைப்பற்றி திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளி, விஜய் தனது முதல் தேர்தலிலேயே வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இருப்பினும் ஆட்சி அமைக்க தேவையான தனிப்பெரும்பான்மையை பெறாததால் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். குறிப்பாக காங்கிரஸுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்த நிலையில், அதன் தலைமை மாநில கமிட்டியை முடிவெடுக்கக் கூறியுள்ளது.
இந்நிலையில் விஜய் அதிமுகவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர்,
‘தவெகவிற்கும், அதிமுகவிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது. பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் என எதிர்பார்க்கிறேன். அண்ணன் எடப்பாடியார் ஆட்சி அமையும்’ என தெரிவித்தார்.