தமிழக செய்திகள்

TN Assembly Election | "பணத்தை வாங்கிவிட்டு விசிலுக்கு வாக்களியுங்கள்..!"- பெரம்பூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம்

தமிழ்நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்த தீயசக்தி திமுக ஆட்சியை தூக்கி எறிவோமா ?

சென்னை பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

தமிழ்நாடே நமக்கு பிடித்தது தான் என்றாலும் நமது பெரம்பூர் தொகுதியில் இருந்து பிரச்சாரம் தொடங்கியுள்ளேன்.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்று முடிவுசெய்துவிட்டேன்.

நமது வீட்டு வாசலில் இருந்து அம்மாவிடம் இருந்து பிரச்சாரத்தை தொடங்குவதாக எண்ணி பெரம்பூரில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளேன்.

பெண்கள் பாதுகாப்பு இல்லாத சட்டம்-ஒழுங்கு சரியில்லாத தமிழகத்திற்கு தீய கட்சி திமுக தான் காரணம்.

5 ஆண்டுகளாக ஆட்சியை நடத்தி மக்களை இந்த நிலைக்கு கொண்டு வந்ததற்கு தீயசக்தி திமுக தான் காரணம்.

நமது பெண் பிள்ளைகள் இரவில் பாதுகாப்பாக கழிப்பறைக்கு கூட செல்ல முடியாத நிலை உள்ளது.

தமிழ்நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்த தீயசக்தி திமுக ஆட்சியை தூக்கி எறிவோமா ?

5 வருடம் காவல்துறையை கையில் வைத்திருக்கும் ஸ்டாலின் சார் ஒரு அடிப்படை பாதுகாப்டையாவது கொடுத்திருப்பாரா?

திமுக கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களது காதில் விசில் ஊதி அனுப்புங்கள்.

திமுக கொடுக்கும் பணத்தை வாங்காமல் விடாதீர். வாங்கிக் கொண்டு விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.