தமிழக செய்திகள்

நாளை பதவியேற்பு விழா- ஏற்பாடுகள் தீவிரம்

நாளை முதலமைச்சராக விஜய் பதவியேற்க உள்ளதாக நேற்று முதல் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை பெறும் முயற்சியில் த.வெ.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, ஆட்சி அமைக்க அழைக்குமாறு கவர்னருக்கு த.வெ.க. தலைவர் விஜய் இமெயில் மூலம் அனுப்பியிருந்தார். அதனை தொடர்ந்து சில தகவல்களை வழங்கும்படி கவர்னர் அறிவுறுத்தி இருந்த நிலையில் அதற்கும் பதில் அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து, முதலமைச்சராக விஜய் எப்போது பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. இந்த நிலையில், நாளை முதலமைச்சராக விஜய் பதவியேற்க உள்ளதாக நேற்று முதல் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையே, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு விழாவிற்கான மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் நாளை விஜய் முதலமைச்சராக பதவியேற்பார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.