தமிழக செய்திகள்

சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் பதவியேற்பு

ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இருந்தார்.

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேற்றுள்ளார்.

கிண்டி மக்கள் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தலைமை நீதிபதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.

சத்தீஸ்கரை சேர்ந்த சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நாக்பூர் பல்கலையில் சட்டம் படித்து மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

SCROLL FOR NEXT