சுற்றுவட்டார பகுதிகளில் பெண்கள் காணாமல் போனதாக போலீஸ் நிலையங்களில் புகார் வந்துள்ளனவா? என்றும் அவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து சுந்தரபாண்டியபுரம் செல்லும் சாலையில் உள்ள வயக்காட்டில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் பெண் உடல் ஒன்று கிடந்தது. இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இது குறித்து சுரண்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், ஆலங்குளம் டி.எஸ்.பி. கிளாட்சன் ஜோஸ், சுரண்டை இன்ஸ்பெக்டர் மதன் ராம்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது பெண் உடல் முழுவதும் எரிந்த நிலையில் காணப்பட்டது. அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து உடனடியாக அடையாளம் தெரியவில்லை.
அவரை யாரேனும் எரித்து கொன்றிருக்கலாமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுவட்டார பகுதிகளில் பெண்கள் காணாமல் போனதாக போலீஸ் நிலையங்களில் புகார் வந்துள்ளனவா? என்றும் அவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். சுரண்டை அருகே பெண் உடல் முழுவதும் எரிந்த நிலையில் காணப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.