திருமயம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து திமுகவை சேர்ந்த ரகுபதி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
எஸ்.ரகுபதிக்கு எதிராக திருமயம் தொகுதியை சேர்ந்த வாக்காளர் பொன்.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகி தேர்தல் வழக்கை தாக்கல் செய்யாமல், வழக்கறிஞர் மூலமாக தாக்கல் செய்ததால் அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனை எதிர்த்து பொன்.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் பொன்.பன்னீர்செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.