திருப்பரங்குன்ற தீப தூணில் கார்த்திக்கை தீபம் நவ.24 அன்று நிபந்தனைகளுடன் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
திருப்பரங்குன்ற மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஒரே ஒரு முறை ஏற்பாடாக தூணில் கார்த்திகை தினமான நவ.24 அன்று , திருப்பரங்குன்ற தீபத்தூணில் தீபமேற்ற அனுமதியானது அளிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும் என்றும் தீபமேற்றும் இடத்திற்கு பொதுமக்கள் யாரும் தீபம் ஏற்றும் இடத்திற்கு செல்ல கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தீபம் ஏற்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் அதன்படி தீபமேற்றும் இடத்திற்கு பொதுமக்கள் செல்ல அனுமதி கிடையாது என்றும், முழக்கங்களை எழுப்பவோ அல்லது கும்பல் கூடவோ கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்து தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். இதனை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்து, கோயில் தேவஸ்தானத்தினர் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தன
அதில் மனுதாரர் தரப்பில் ஆண்டுக்கு ஒரு நாள் இரண்டு மணி நேரம் மட்டும் தீபம் ஏற்றுவதால் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை என வாதிடப்பட்டது.
தமிழக அரசு சார்பாக மலையில் உள்ள தூண் தீபத்தூண்அல்ல, அது ஒரு எல்லை அளவீட்டுக் கல் தூண் என்றும்; வழக்கமான தீபம் ஏற்றும் இடம் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கார்த்திக்கை நாளன்று நிபந்தனைகளுடம் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.