தமிழக செய்திகள்

த.வெ.க.வுக்கு ஆதரவு அளியுங்கள்: திருமாவளவனிடம் பேசிய கார்கே

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளியுங்கள் என திருமாவளவனிடம் கார்கே கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழக சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவை கோரினார். காங்கிரஸ் உடனடியாக ஆதரவு வழங்கி விட்டது. இன்று கம்யூனிஸ்டு கட்சிகள் முடிவு எடுக்க இருக்கின்றன. விசிக நாளை முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே டெலிபோன் மூலம் பேசியுள்ளார். அப்போது த.வெ.க.-வுக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு அளித்தால் விசிக-வும் ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.