தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக சிபிஐ-யின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெரும்பாலானோர் த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்கலாம் என கூறியதாக தகவல் வெளியாகின.
இந்த நிலையில், சென்னை சூளைமேட்டில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் நிறைவுபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, இன்று மாலை 4.30 மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் 3-வது முறையாக ஆளுநரை சந்திக்க உள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.