தமிழக செய்திகள்

சூலூர் பகுதியில் போதைப்பொருட்கள் பறிமுதல்- 2 பேர் கைது

சந்தேகத்திற்கிடமாக வந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் பெங்களூருவில் உள்ள சிப்பட் மார்க்கெட்டில் இருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வாங்கி, சூலூர் பகுதிகளில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

கோவை மாவட்டம் சேலம்-–பாலக்காடு எல் டி பைபாஸ் சாலையில் சிந்தாமணிப்புதூர் சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

பறிமுதல்

அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 2 கிலோ கஞ்சா, 1,000 டேபென்டாடோல் மாத்திரைகள் மற்றும் 200 நைட்ரஸெபாம் மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம், டேபென்டாடோல் மாத்திரைகளின் மதிப்பு ரூ.4 லட்சம், நைட்ரஸெபாம் மாத்திரைகளின் மதிப்பு ரூ.80 ஆயிரம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீசார்

மேலும், ஊசி மற்றும் சில்வர் டம்ளர் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சவுரிபாளையத்தை சேர்ந்த விஷ்ணு பிரபு (18), உடையாம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (29) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணை

போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் பெங்களூருவில் உள்ள சிப்பட் மார்க்கெட்டில் இருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வாங்கி, சூலூர் பகுதிகளில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

கைது

இதுதொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கு நிலுவைகைது செய்யப்பட்ட விஷ்ணு பிரபு மீது சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. அதேபோல் மணிகண்டன் மீது பீளமேடு போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT