கோவையில் பட்டியலின மாணவன் சாதி ரீதியான துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, கோவை மாநகரக் காவல் ஆணையர் ஒரு வார காலத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது
கோவை மாவட்டம், பீளமேடு பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவன் அவிநாசி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான கே.கே.நாயுடு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார் .சக மாணவர்கள் மற்றும் ஆசிரியரின் சாதியக் கொடுமைகள் மற்றும் கேலிப் பேச்சுகளால் மனமுடைந்து தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டார்
அகிலன் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் சக மாணவர்கள் அவரைப் புறக்கணித்ததாகவும், மாட்டுக்கறி சாப்பிடுவது குறித்து ஆசிரியர் விஜயகுமார் வகுப்பறையில் கேள்வி எழுப்பி துன்புறுத்தியதாகவும் மாணவனின் தாயார் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மேற்படி சம்பயம் தொடர்பாக அவனது தாயார் கொடுத்த புகாரின் பேரில், அதே பள்ளியை சேர்ந்த நான்கு பேர் மீது பிளமேடு காவல் துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆகவே, கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் மேற்படி சம்பலம் தொடர்பாகவும் குற்றவாளிகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறறு மாநில மாநில எஸ்.சி./எஸ்.டி. ஆணையம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது