தமிழக செய்திகள்

கோயம்பேட்டில் சாலையோரம் வீசப்பட்ட கரும்புகள், விற்பனை மந்தமானதால் விவசாயிகள் வேதனை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தின்பல பகுதிகளில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு கரும்புகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

கரும்பு விற்பனை

விநாயகர் சதுர்த்தி சிறப்பு நாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து டன் கணக்கில் கரும்புகள் கோயம்பேடு சந்தைக்கு லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டன.

வழக்கமாக விநாயகர் சதுர்த்தி நாளில் கரும்புகளை மக்கள் வாங்கி செல்வது உண்டு. ஆனால் இந்த ஆண்டு கரும்புகள் அதிக அளவில் விற்பனையாகவில்லை என்று கரும்பு வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

வேதனை

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட கரும்புகள் அதிகளவில் விற்பனை ஆகாததால் கரும்பு விற்பனையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

வீசி செல்லப்பட்ட கரும்புகள்

விநாயகர் சதுர்த்தி நாளில் கரும்பு விற்பனை நினைத்தப்படி இல்லாததாலும் அவற்றை மறுபடியும் ஊருக்கு எடுத்து செல்ல முடியாத காரணத்தினாலும் கரும்புகளை கோயம்பேட்டில் உள்ள சாலையோரங்களில் வீசி சென்றுள்ளனர்.

கரும்பை வெளி ஊர்களிலிருந்து முதலீடுகளை போட்டு ஏற்றி வந்ததாகவும் ,விற்பனையாளர்களுக்கான கூலியை கூட தர இயலாத சூழலில்தான் கரும்பு விற்பனையாகி இருப்பதாகவும் கரும்பு வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை

கோயம்பேடு மார்கெட்டில் விற்பனை செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடம்தான் விற்பனை சரிவிற்கு முக்கியமான காரணம் என்று கரும்பு வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எங்களுக்கு விற்பனைக்காக ஒதுக்கப்பட்ட இடம் உள்ளே அமைந்து போனதால் இந்த இடம் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெரியாமல் போனது. இது ஒரு முக்கிய காரணம் என்று கூறியுள்ளனர் . இதனால் கோயம்பேடு மார்கெட்டில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக வேறொரு இடத்தை நியமித்து தருமாறு கரும்பு வியபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT