சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகே ஓஎம்ஆர் சாலையில் வந்து கொண்டிருந்த கார் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது.
அப்பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வரும் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த பள்ளத்தில் கார் தலைக்குப்புற கவிழ்ந்த நிலையில் கார் ஓட்டுநர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.