தமிழக செய்திகள்

வடசென்னை அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

2வது நிலை 2வது அலகில் ஜெனரேட்டர் டிரான்ஸ்பார்மரில் தீ பற்றியுள்ளது.2வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், 2வது நிலை 2வது அலகில் ஜெனரேட்டர் டிரான்ஸ்பார்மரில் தீ பற்றியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், கொழுந்துவிட்டு எரியும் தீயை, ரசாயன நுரை, தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்தால், 2வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT