தமிழக செய்திகள்

தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவி

மதுமிதாவிற்கு இன்று பிளஸ்-2 கணிததேர்வு நடைபெற்றது.தந்தையின் பூத உடலை வணங்கி விட்டு மாணவி மதுமிதா தனது பள்ளிக்கு தேர்வு எழுத சென்றார்.

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள விஜயச்சம்பாடு வடலிவிளை கிராமத்தை சேர்ந்தவர் அய்யாதுரை (வயது 55). இவரது மனைவி பானுமதி.

இவர்களது மகள் மதுமிதா இட்டமொழியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிஸஸ்-2 படித்து வருகிறார். அய்யாதுரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்நிலையில் மதுமிதாவிற்கு இன்று பிளஸ்-2 கணிததேர்வு நடைபெற்றது. இதற்கிடையே தந்தை இறந்த நிலையிலும் தந்தையின் பூத உடலை வணங்கி விட்டு மாணவி மதுமிதா தனது பள்ளிக்கு தேர்வு எழுத சென்றார்.

தந்தை இறந்த சோகத்திலும் லட்சியத்தை நோக்கி பயணம் செய்யும் மாணவியை பொதுமக்கள் பாராட்டினர். 

SCROLL FOR NEXT