அரக்கோணத்தில் இருந்து ஆந்திர மாநிலம் கடப்பாவிற்கு சென்ற மின்சார ரெயில் சூர்யா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சூர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா்.
திருத்தணி அருகே உள்ள மத்தூர் காலனியை சோ்ந்தவா் காளிதாஸ். இவரது மகன் சூர்யா என்கின்ற ஜெயப்பிரகாஷ் (வயது13). மத்தூரில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்தநிலையில் இன்று காலை சூர்யா அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் மத்தூர் ரெயில்வே தண்டவாளம் அருகே விளையாடிக் கொண்டு இருந்தார்.
அப்போது அரக்கோணத்தில் இருந்து ஆந்திர மாநிலம் கடப்பாவிற்கு சென்ற மின்சார ரெயில் சூர்யா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சூர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா்.
இதனை கண்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர். பலியான மாணவனின் உடலை பெற்றோர் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். தகவல் அறிந்ததும் அரக்கோணம் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது சூர்யாவின் உடலை கொடுக்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த விபத்து தொடர்பாக அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.